தமிழக அரசு உதவி பெறும் கல்லூரி காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! - Daily Dhuniya

Breaking

Tuesday, July 6, 2021

தமிழக அரசு உதவி பெறும் கல்லூரி காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

கோயம்பத்தூர் மாவட்டத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்ட நிலையில் பல கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் பல கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா உடற்கல்வியியல் கல்லூரியில் அரசு உதவி பெறும் பணியிடங்களை நிரப்ப தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த கல்லூரியில், தட்டச்சர், அலுவலக உதவியாளர், மைதான பணியாளர், ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இதற்காக அரசு விதிகளின்படி விண்ணப்பங்களை இன்று முதல் 10 நாட்களுக்குள் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment