ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதம் TET தேர்வு – மாநில அரசு அறிவிப்பு! - Daily Dhuniya

Breaking

Sunday, June 27, 2021

ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதம் TET தேர்வு – மாநில அரசு அறிவிப்பு!

அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்றால் டெட் என்ற தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டியது என்பது அவசியமான ஒன்று ஆகும். அது குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

டெட் தேர்வு:
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டெட் என்று கூறப்படும் ஆசிரியர்களுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகின்றது. அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்றால் இந்த தேர்வினை கண்டிப்பாக எழுதுவது அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு TET தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் MSCE என்று கூறப்படும் மாநில தேர்வு கவுன்சில் ஆண்டுதோறும் இந்த தேர்வுகளை நடத்தி வருகின்றது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த கவுன்சில் அந்த மாநிலத்தில் இந்த தேர்வுகளை நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதமே நடைபெற இருந்த இந்த தேர்வுகள் தற்போது வரை தள்ளி வைக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து MSCE-ன் ஆணையர் துகாராம் சூபே கூறுகையில், “இந்த ஆண்டு டெட் தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட திட்டமிடப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்காக பணிகள் மேற்கொள்ளப்படாததால் ஓ.எம்.ஆர் அடிப்படையில் ஆஃப்லைனில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வுகளுக்கான பணிகள் முழுமை பெரும் வரை ஆஃப்லைனில் தான் தேர்வுகள் நடத்தப்படும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment