இந்தியாவில் ஜிஎஸ்டி சான்றிதழ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான எளிய இணையதள வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஜிஎஸ்டி சான்றிதழ்:
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இந்த சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. பொருள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றின் மீது தேசிய அளவில் விதிக்கப்படும் வரியே ஜிஎஸ்டி எனப்படுகிறது. பல்வேறு வரி விதிப்புகளை அகற்றி, நாடு முழுக்க ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறையை கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
ஒவ்வொரு வணிகரும் ஜிஎஸ்டி வரிக்கான சான்றிதழ்களை வைத்திருப்பது அவசியமாகும். தற்போது ஜிஎஸ்டி சான்றிதழை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான எளிய வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சான்று பெறும் முறைகள் : இந்த பதிவை மேற்கொள்ள பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் போன்றவை கட்டாயமாகும்.
முதலில் https://www.gst.gov.in/ என்ற அதிகாரபூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் New Registration என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு புதிய முகப்பில் வரும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்தவுடன் சரிபார்த்து SUBMIT கொடுக்கவும்.
பிறகு உங்கள்மொபைல் எண்ணிற்கு Reference Number வரும்.
அந்த எண்ணை உள்ளிட வேண்டும். அதன் பின் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு OTP எண் வரும். அதை பதிவிட வேண்டும்.
இறுதியாக PROCEED கொடுக்கவும். பிறகு புதிய திரை உருவாகும் அதில் உங்கள் வணிக விவரங்களை பதிவு செய்து SAVE கொடுக்கவும்.
பிறகு PROMOTER அல்லது PARTNER என்பதில் உங்கள் சுய விவரங்களை பதிவிட வேண்டும்.
அடுத்து HSN நம்பர் GST இணையதளத்தில் பதிவு செய்து சேமிக்கவும். தொடர்ந்து E- sign குடுத்து OTP பெற்று பதிவை உறுதி செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment