விஜயதசமி அன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? - குழப்பத்தில் பெற்றோர் மற்றும் அதிகாரிகள் - Daily Dhuniya

Breaking

Monday, October 3, 2022

விஜயதசமி அன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? - குழப்பத்தில் பெற்றோர் மற்றும் அதிகாரிகள்

Will school admissions take place on Vijayadashami? - Confused parents and authorities - விஜயதசமி அன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? - குழப்பத்தில் பெற்றோர் மற்றும் அதிகாரிகள்



விஜயதசமி தினத்தில் பள்ளிகளில் Pre KG அல்லது முதல் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் அரசு பள்ளிகளிலும் விஜயதசமி நாளன்று மாணவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் புதன்கிழமை மாணவர் சேர்க்கை நடத்தலாமா என மாவட்ட அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு இதேபோன்ற சூழலில் பல பள்ளிகளில் ஆசிரியர்களே முன்வந்து மாணவர் சேர்க்கை நடத்தியிருந்தனர். எனினும், கல்வித்துறை ஆணையர் முறையான அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே விஜயதசமி நாளில் அரசு பள்ளிகளில் முழுவீச்சில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறப்படுகிறது

No comments:

Post a Comment