தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் இன்று மோடி கலந்துரையாடல் - Daily Dhuniya

Breaking

Sunday, September 4, 2022

தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் இன்று மோடி கலந்துரையாடல்

தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாட இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆசிரியராக பணியைத் தொடங்கி நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் நினைவாக அவருடைய பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் பள்ளி கல்வி வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் எதிர்காலத்தை வளமுடையதாக்கவும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி ஒன்றிய அரசு கவுரவிக்கிறது.இந்தாண்டு, ராமநாதபுரம் மாவட்டம் கீழம்பலை சேர்ந்த ஆசிரியர் ராமசந்திரன் உள்பட 45 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்காக தேர்வாகி உள்ளனர்.

இந்நிலையில், தேசிய விருது பெறும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாட இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தங்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பின் மூலம் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு, மாணவர்களின் வாழ்க்கையையும் வளப்படுத்திய நாட்டின் மிக சிறந்த ஆசிரியர்களின் தனித்துவ பங்களிப்பை கவுரவிப்பதே ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகளின் நோக்கமாகும். இந்தாண்டு ஆசிரியர்களுக்கான தேசிய விருதை வென்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி 7 லோக் கல்யாண் மார்க்கில் இன்று மாலை 4:30 மணிக்கு கலந்துரையாடுவார்,’ என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment