திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு - Thirukkural speech, painting competition: call for school and college students
திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு
தமிழக அளவிலான திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஸ்ரீராம் இலக்கிய கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஸ்ரீராம் இலக்கிய கழகம் சாா்பில் அக்.15 முதல் நவ. 27-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டியை நடத்தவுள்ளது. இந்தப் போட்டிகள் 12 மையங்களில் நடத்தப்படும். சென்னையில் அக்.15-ஆம் தேதி தியாகராயநகரில் உள்ள எஸ்.எஸ்.எஸ். ஜெயின் மகளிா் கல்லூரியிலும், 16-ஆம் தேதி முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும். சென்னை தவிர தஞ்சாவூா், திருச்சி, திருவாரூா், புதுச்சேரி, மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, சேலம், வேலூா் ஆகிய நகரங்களிலும் நடத்தப்படும். இடைநிலை (6-8), மேல்நிலை (9-12), கல்லூரி என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்புவோா் இதற்கான விண்ணப்ப படிவத்தினை அருகில் உள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளைகள் அல்லது எண் 145, சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூா், சென்னை-600004, தொலைபேசி- 044- 40214100’ என்ற முகவரியிலோ பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.shriramchits.com என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்.10-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். இந்தப் போட்டிகள் குறித்த கூடுதல் தகவல்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment