ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் தொடக்கக் கல்வித் துறை சார்பில் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்ட கோரிக்கைத் தீர்மானங்கள் - Daily Dhuniya

Breaking

Friday, September 9, 2022

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் தொடக்கக் கல்வித் துறை சார்பில் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்ட கோரிக்கைத் தீர்மானங்கள்

Resolutions submitted to the Hon'ble Chief Minister of Tamil Nadu by the Government of Tamil Nadu on behalf of the Primary Education Department at the Jacto Jio Livelihood Trust Conference

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் தொடக்கக் கல்வித் துறை சார்பில் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்ட கோரிக்கைத் தீர்மானங்கள்

1) தொடக்கக் கல்வித் துறையினை பள்ளிக் கல்வித் துறையோடு இணைத்து நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள அரசாணை 101, 108ஐ உடனடியாக இரத்து செய்யப்பட்டு தலைவர் கலைஞர் கால நிர்வாக கட்டமைப்பு தொடர்ந்திட வேண்டும்.

2) பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடத்தை இரத்து செய்து, பதவி உயர்வு வழி பள்ளிக்

கல்வி இயக்குநர் பணியிடம் தொடரச் செய்திட வேண்டும்.

3) இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு முற்றிலும் களையப்பட வேண்டும்.

4) ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்திட அனுமதிக்க வேண்டும்.

5) பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு 10.03.2020 முதல் நிறுத்தப்பட்டு ஊக்கத் தொகையாக வழங்கப்படுவதை மாற்றி அமைத்து பழைய முறையில் ஊக்க ஊதியமாகவே தொடர்ந்திட ஆணை வழங்க வேண்டும். 10.03.2020க்கு முன்னர் உயர் கல்வி முடித்தோரின் ஊக்க ஊதிய உயர்வு உடன் வழங்கப்பட வேண்டும்.

6) 2003-2004 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்கள் தொகுப்பூதியப் பணிக்காலத்தை காலமுறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்.

7) EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியிலிருந்து ஆசிரியர்களை முற்றிலும் விடுவிக்க வேண்டும். இணையதளம் மூலம் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யும் பணியினை உடனடியாக நிறுத்த வேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும்.

8) தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் டாக்டர் கலைஞர் அவர்கள் பி.லிட், தமிழ் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்க ஆணையிட்டார். அதன்படி பதவி உயர்வு பெற்றவர்கள் அதன்பின் பி.எட், பட்டம் பெற்றமைக்காக வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு தணிக்கைத் தடை என்ற பெயரால் தடுத்து நிறுத்தப்படுகிறது. தடையினை நீக்கிட ஆணை வழங்க வேண்டும்.

9) உயர்கல்வி படித்து பின்னேற்பு அனுமதிக்காக காத்திருக்கும் 6,500 ஆசிரியர்களுக்கு உரிய பின்னேற்பு ஆணை வழங்க வேண்டும்.

10) இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கல்வித் தகுதி அடிப்படையில், அவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை உருவாக்கி அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கி பணியமர்த்திட வேண்டும்.

11) நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் நிலை இறக்கம் செய்யப்பட்ட 95 துவக்கப்பள்ளிகளுக்கும் புதிதாக துவக்கப்பட்ட 20 துவக்கப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. உடன் பணியிடம் தோற்றுவித்து ஆணை வழங்கிட வேண்டும்.

12) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் நியமனத் தேர்வு வைக்கும்

அரசாணை 149 இரத்து செய்திட வேண்டும். தற்காலிக ஆசிரியர் நியமன நடைமுறை கைவிடப்பட வேண்டும். தகுதித் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் நிரந்தர ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டும்.

13) “எண்ணும், எழுத்தும்” திட்டத்தை தனியார் ஆய்வு செய்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

14) பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு என்ற பெயரில் பள்ளியினைக் கண்காணிக்கும் நடைமுறைகளால் கற்றல், கற்பித்தல் பணியில் ஏற்படும் பாதிப்பினைக் கருத்தில் கொண்டு அத்தகைய நடைமுறைகளைக் கைவிட வேண்டும்.

15) அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 5 வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப் படும். காலை சிற்றுண்டி அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

16) தேசத்தின் எதிர்காலக் கல்வியைச் சீரழிக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்.

17) இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு லட்சக்கணக்கானோர் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் நிலையில், காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக மதிப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்யப் போவதாக அறிவித்துள்ள அரசாணையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். உடனடியாக 13,331 காலிப்பணியிடங்களில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில், நிரந்தரப் பணியிடத்தில் நியமனம் செய்திட வேண்டும்.

18) தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், வேளாண்மை, பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புக்களில் 7.5% தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுவது போல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் 2.5% தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அதேபோன்று அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவு படுத்திட வேண்டும்.

19) அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நியமன ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால் அவ்வாறு நியமனம் பெற்ற ஆசிரியர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக நியமன ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.

20) தமிழக அரசு ஆசிரியர்களின் இன்றைய பணிச்சூழலைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

21) கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும்.

22) தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான பயிற்சிகளுக்கும் கடந்த காலங்களில் வழங்கப்பட்டது போல் மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும்.

23) கடந்த ஊதியக் குழுக்களில் தேர்வுநிலை, சிறப்புநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்பட்ட சிறப்புப் படிகள் அனைத்தும் தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும். இது தொடர் பான தணிக்கைத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

24) தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அரசாணைகளின்படி முழுக் கட்டணத்தையும் அளிக்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு கட்டணமில்லா சிகிச்சையை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

25) SSA திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் குறைந்தபட்சம் 1 தலைமை ஆசிரியர், 3 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது போல் NON-SSA நடுநிலைப்பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

26) மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் தொடர்பாக பணிநியமனம் பெற்ற ஒன்றியத்தை கணக்கில் கொள்ளாமல், தற்போது பணிபுரியும் ஒன்றியத்தை மட்டுமே ஒரு அலகாகக் கொண்டு கோரிக்கைகளை பரிசீலித்து ஊதிய முரண்பாடு களைதல் வேண்டும்.

27) ஐந்தாண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பணிநியமனம் பெற்றவர்களைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக தகுதித் தேர்வே நடத்தாத சூழலைக் கருத்தில் கொண்டு தகுதித் தேர்விலிருந்து முற்றிலும் விலக்களித்திட பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

28) அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் நியமனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரப் படுத்தி காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

29) ஆசிரியைகளுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மகப்பேறு விடுப்பிற்கு விடுப்புப் பதிலி ஆசிரியர் நியமனம் செய்து கற்பித்தல் பணி தடைபடாமல் தொடர்ந்திட ஆவண செய்திட வேண்டும்.

No comments:

Post a Comment