நீட் தேர்வு: ஏ.கே ராஜன் குழு அறிக்கை உணர்த்துவது என்ன? - Daily Dhuniya

Breaking

Monday, September 12, 2022

நீட் தேர்வு: ஏ.கே ராஜன் குழு அறிக்கை உணர்த்துவது என்ன?

ு நீட் தேர்வில் முதல் முறையாக தோல்வியுற்ற மாணவர்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் தேர்வெழுதி மருத்துவ இடங்களை கைப்பற்றும் போக்கு அதிகரித்துள்ளது

முந்தைய காலங்களில் இல்லாத வகையில், 2022 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் (Cut-off Marks) அனைத்து பிரிவினருக்கும் குறைந்திருக்கிறது. பொதுப்பிரிவில் உள்ள மாணவர்களுக்கு 117 (720ல்) மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 93 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டன. அதாவது, கேட்கப்பட்ட 200 கேள்விகளில் குறைந்தது 20 கேள்விகளுக்கு மிகச்சரியான பதில்கள் தெரிந்திருந்தால் கூட தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், வெறும் 67, 787 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 51.20% ஆகும். கிட்டத்தட்ட 64,380 மாணவர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை எடுக்க வில்லை. குறிப்பாக, சென்னையில் 5 இடங்களில் நடத்தப்பட்ட அரசின் சிறப்பு நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 346 பேரில், 265 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

முன்னதாக, பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், இந்தாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண் 500-க்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களில் வெறும் மூவர் மட்டுமே 450 முதல் 471 மதிப்பெண் பெற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 7.5% ஒதுக்கீடு மட்டும் இல்லாவிட்டால், அரசுப் பள்ளி மாணவர்களில் ஒருவருக்குக்கூட இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

நடந்து முடிந்த 12ம் வகுப்புத் தேர்வில் இயற்பியல் பாடத்தில் 634 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 1500 மாணவர்களும், உயிரியல் (BIOLOGY) பாடத்தில் 1541 மாணவர்களும், தாவரவியல் பாடத்தில் 47 மாணவர்களும், விலங்கியியல் பாடத்தில் 22 மாணவர்களும் 100% (நூற்றுக்கு நூறு) மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இதில், கணிசமான மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களாக இருக்கக் கூடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே, மாநில பாடத்திட்டங்களில் சிறந்து விளங்கும் பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வில் சோபிக்கவில்லை என்று தெரிய வருகிறது.

முன்னதாக, நீட் தேர்வு தொடர்பான பாதிப்புக்களை விசாரிப்பதற்கு நீதியரசர் ஏ கே ராஜன் குழுவும், இதே கருத்தை முன்வைத்தது.

No comments:

Post a Comment