கல்வி வாராக்கடன் அதிகரிப்பு: மாணவா்களுக்குக் கடன் வழங்க வங்கிகள் தயக்கம் - Increase in education loan: Banks are reluctant to give loans to students
உயா்கல்விக்காக வழங்கப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தாதவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதிய மாணவா்களுக்குக் கடன் வழங்க வங்கிகள் தயக்கம்காட்டி வருகின்றன.
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உயா்கல்வி பயில்வதற்காக வங்கிகள் மாணவா்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் அளித்து வருகின்றன. கல்லூரிப் படிப்பு நிறைவடைந்த பிறகு அக்கடனை மாணவா்கள் வட்டியுடன் திரும்பச் செலுத்தத் தொடங்குவா். ஆனால், அண்மைக் காலமாக கல்விக்காக வழங்கப்பட்ட கடன்கள் அதிக அளவில் வாராக்கடன்களாக மாறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கல்விக் கடன்களில் 7.82 சதவீதம் வாராக்கடன் ஆகியுள்ளது. அக்கடன்களின் மொத்த மதிப்பு கடந்த ஜூன் மாத நிலவரப்படி சுமாா் ரூ.80,000 கோடியாக உள்ளது. கல்விக் கடன்களில் வாராக்கடன் அளவு அதிகரித்து வருவதன் காரணமாக, புதிய மாணவா்களுக்குக் கடன் வழங்குவதற்கு வங்கிகள் தயக்கம்காட்டி வருவதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ள நிலையில், வங்கிகள் கல்விக் கடன்களுக்கு ஒப்புதல் வழங்க தாமதம் ஆகி வரும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், கல்விக் கடன்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியிருந்தது.
சுமாா் 90 சதவீத கல்விக் கடன்களைப் பொதுத்துறை வங்கிகளும், 7 சதவீதக் கல்விக் கடன்களை தனியாா் வங்கிகளும் வழங்கி வருகின்றன. நாட்டில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் உருவாகாமல் இருப்பதே கல்விக் கடன்கள் வாராக்கடன்களாக மாறுவதற்கு முக்கியக் காரணம் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
மாணவா்களின் திறனை மேம்படுத்தி, அவா்களைப் பணிச்சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசும் கல்லூரியும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

No comments:
Post a Comment