பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு - தி.மு.க.,வினரின் இரட்டை நாக்கு! - Breakfast for school students - DMK, Winar's double tongue! - Daily Dhuniya

Breaking

Tuesday, September 27, 2022

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு - தி.மு.க.,வினரின் இரட்டை நாக்கு! - Breakfast for school students - DMK, Winar's double tongue!

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்தார். இது பற்றி கருத்து தெரிவித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், 'குழந்தையும், தெய்வமும் ஒன்று என்பர். அந்த தெய்வங்களுக்கு, சிற்றுண்டி படைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தெய்வங்களுக்கு படையலிட்டால், அவற்றை தெய்வங்கள் உண்ணாது; ஆனால், இந்த மழலை தெய்வங்கள் உண்டு மகிழ்கின்றன' என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

காலை உணவு திட்டத்தை துவக்கிய முதல்வர் ஸ்டாலின், தன் பக்கத்தில் ஒரு புறம் அமர்ந்திருந்த சிறுமிக்கும், மற்றொரு பக்கம் அமர்ந்திருந்த சிறுவனுக்கும் உணவை ஊட்டி விட்டார். அதன்பின், தனக்கான உணவு இருந்த தட்டில் கையை கழுவினார்; இதனால், விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளார்.
ஆனால், எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டம் துவக்கிய, 'வீடியோ'வை பார்த்து விட்டு, ஸ்டாலின் இந்தத் திட்டத்தை துவக்கி இருந்தால், சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்க மாட்டார். ஏனென்றால், சத்துணவு திட்டம் துவக்கிய எம்.ஜி.ஆர்., முதலில் மாணவர்களுக்கு உணவை பரிமாறினார். பின், தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து, உணவை சாப்பிட்டபடியே, தன் இரு பக்கத்திலும் அமர்ந்து சாப்பிட்ட குழந்தைகளை பார்த்து, சாப்பிடும்படி சொல்லி உற்சாகப்படுத்தியதோடு, 'உணவு நன்றாக இருக்கிறதா?' என்றும் அக்கறையுடன் விசாரித்தார்.

அத்துடன், தன் தட்டில் வைக்கப்பட்டிருந்த உணவு முழுதையும் சாப்பிட்டு முடித்தார். இதையெல்லாம் முன்கூட்டியே பார்த்த பின், காலை உணவு திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்திருந்தால், தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்க மாட்டார்.

கடந்த 1982ல், எம்.ஜி.ஆர்., அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டத்தை, 'ஏழை குழந்தைகளை பிச்சையெடுக்க வைக்கும் திட்டம்; சிறுவர்களை தட்டேந்த வைக்கும் திட்டம்' என்றெல்லாம், மேடைகளில் விமர்சித்தனர் தி.மு.க.,வினர்.

ஆனால் இன்று அவர்களே, ஸ்டாலின் சமீபத்தில் துவக்கிய திட்டத்தை, 'தெய்வங்களான குழந்தைகள் சாப்பிடுகின்றன' என்று புகழ்கின்றனர். என்னே இவர்களின் இரட்டை நாக்கு... நரம்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் வளையும் என்பது இதுதானோ!

No comments:

Post a Comment