பி.எட். படிப்புக்கு அக். 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு. - Daily Dhuniya

Breaking

Saturday, September 24, 2022

பி.எட். படிப்புக்கு அக். 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு.

பி.எட். படிப்புக்கு இன்று முதல் அக். 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு.

ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ் செயல்படும், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., சேர்க்கைக்கு, அரசின் சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்களை, கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி நேற்று வெளியிட்டார். இதன்படி, tngasaedu.in என்ற இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.

அக்., 3 வரை பதிவு செய்யலாம்;

6ல் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

12 முதல், கவுன்சிலிங் துவங்கும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment