சென்னை:சத்துணவு திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, அனைத்து பள்ளி நாட்களிலும், பல வகை கலவை சாதத்துடன், மசாலா முட்டை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், 43 ஆயிரத்து 190 சத்துணவு மையங்களில், 46.70 லட்சம் மாணவர்களுக்கு முட்டையுடன் சத்துணவு வழங்கப்படுகிறது.ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 54 ஆயிரத்து 439 குழந்தைகள் மையங்களில், 27 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கும் உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், குழந்தைகள் மற்றும் மாணவ - மாணவியருக்கு, மதிய உணவுடன் முட்டை வழங்குவதற்காக, நடப்பாண்டுக்கு 640 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிதியில் ஓராண்டுக்கு 122.17 கோடி முட்டைகள் 'சப்ளை' செய்ய, ஐந்து மண்டல வாரியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment