புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் புரட்சிப்பயணம்
தமிழக மக்களின் நலனுக்காகவும், திமுக தலைமையிலான ஆட்சியால் மக்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்திடவும், பெண்ணினத்தின் உரிமைகளை நிலைநாட்டிடவும், புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள், சேலம், ஈரோடு மாவட்டங்களில் தனது புரட்சிப்பயணத்தை தொடர்ந்து மேற்கோள்கிறார்.
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் பெருமைகளையும், பெண்ணினத்தின் பாதுகாவலராக விளங்கிய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணமாக தொடர்ந்து பயணிக்க உள்ளார். இதற்காக, வருகின்ற 07-09-2022 புதன்கிழமை அன்று காலை, தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் சென்றடைகிறார்.
அதன்பின் மறுநாள் 08-09 2022 வியாழக்கிழமை அன்று திருத்துறைப்பூண்டி, பாமணி என்ற இடத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா ஆலயத்தில் காலை நடைபெற இருக்கின்ற மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கிறார்.
அதன்பின்னர் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர், வீரகனூர் வழியாக தலைவாசல் சென்றடைந்து மதியம் 2.30 மணியளவில், அங்கிருந்து தனது புரட்சிப்பயணத்தை மேற்கொள்ளும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் ஆத்தூர் பேருந்து நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில், சேலம் நான்கு ரோடு அண்ணா பூங்கா, தாதகாபட்டி, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோடு, சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.
அதன்பிறகு மறுநாள் 12-09-2022 திங்கள்கிழமை அன்று மதியம் 3.00 மணியளவில் அரியானூரிலிருந்து தனது புரட்சிப்பயணத்தை மேற்கொள்ளும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மகுடஞ்சாவடி, சங்ககிரி எடப்பாடி பிரிவு. பள்ளிப்பாளையம், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு திண்டல் முருகன் கோவில் ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.
புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மேற்கொள்ளும் இந்த புரட்சிப்பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், புரட்சித்தலைவி அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கழகப் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம்
அஇஅதிமுக

No comments:
Post a Comment