தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மூன்று ஆண்டு பயிற்று விக்கப்படுவார்கள். இதில், ஆறு மாதங்கள் பயிற்சி வகுப்பும் அடங்கும்.
தமிழ்நாடு அரசு செவிலியர் பயிற்சி கல்லூரிகளில் உள்ள செவிலியர் பட்டயப் படிப்பிற்கான விண்ணப்ப செயல்முறை வரும் 12ம் தேதி வரும் நடைபெறும் என்று தமிழ்நாடு மருத்துவக் கழகம் தெரிவித்துள்ளது.
எவ்வளவு இடங்கள் : 2060
தமிழகத்தில் செயல்படும் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2060 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.
இந்திய குடிமகனாகவும், தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட பெண் விண்ணப்பபதாரர்கள் மட்டுமே இந்த பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
அதேசமயம், சுயமாக தங்களை மூன்றாம் பாலினமாகக் கண்டுக்கொண்ட விண்ணப்பத்தாரர்கள் தங்களை பெண் என்று அடையாளப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மூன்றாம் பாலின நலவாரியத்தால் வழங்கப்பட்ட சான்றிதழை இனணயதள விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்து செவிலியர் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். கல்வித் தகுதி: தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் அல்லது அதற்கு இணையான கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட 12ம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: விண்ணப்பதாரர்கள் 31 டிசம்பர் 2022 அன்று 17 வயது நிறைவு செய்தவராக இருக்க வேண்டும். (சில நாட்களுக்குப் பிறகு பிறந்தவர்களும் பரிசீலிக்கப்படுவார்கள், அதிகபட்சம் 15 நாட்கள்)
அதிகபட்ச வயது: 31 டிசம்பர் 2022-ல் அன்று 35 வயது மிகாதவராக இருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மூன்று ஆண்டு பயிற்று விக்கப்படுவார்கள். இதில், ஆறு மாதங்கள் பயிற்சி வகுப்பும் அடங்கும். பயிற்சி காலம் முழுவதும் கட்டாயமாக விடுதியில் தங்கியிருக்க வேண்டும். உணவுக் கட்டணங்களை மாணவர்கள் கட்டாயமாக செலுத்த வேண்டும். மாதாந்திர கல்வி உதவி தொகை வழங்கப்படும். முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை நாள்: 31-07-2022
இணையவழி மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய : 01-08-2022 முதல் 12-08-2022 வரை
தரவரிசைப் பட்டியல், தற்காலிக இடஒதுக்கீடு, கல்லூரியில் இணைதல் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
tnhealth.tn.gov.in, tnmedicalsection.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 10-ம் வகுப்பு மதிப்பெண் தாள், மேல்நிலை தேர்வு மதிப்பெண் தாள், மேல்நிலை படிப்பு முடிந்ததும் பெறப்பட்ட மாற்றுச் சான்றிதழ்கள், பிறப்பிட சான்றிதழ், நிரந்தர சாதிச் சான்றிதழ் அட்டை உள்ளிட்ட அசல் சான்றிதழ்களை விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment