ஐஐடி.யில் படிக்க விரும்புவோருக்கு உதவும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கம் - Daily Dhuniya

Breaking

Saturday, August 27, 2022

ஐஐடி.யில் படிக்க விரும்புவோருக்கு உதவும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கம்

ஐஐடி சார்பில் புதிய இணையதளம்

ஆக. 27:

சென்னை, சென்னை ஐஐடி.யில் படிக்க விரும்புவோருக்கு உதவும் வகையில் ASkIITM.com என்ற இணையத ளத்தை ஐஐடி.யின் முன் னாள் மாணவர்கள் உரு வாக்கியுள்ளனர்.

இதுகுறித்து, சென்னை ஐஐடி இயக்குனர் காம கோடி கூறுகையில், “ஐஐடியில் சேர விருப்ப முடைய மாணவர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை சமூக வலை தளங்களுக்குச் சென்று தேடுகிறார்கள். ஆனால், அதில் கிடைக்கும் தகவல் அவர்களுக்கு குழப்பத் தையே ஏற்படுத்துகின் றன. நம்பகமான தகவ லைப் பெறுவது மிகவும் அவசியமான ஒன்று.

தற்போது முன்னாள் மாணவர்கள் இந்த இணைய தளத்தினை உரு வாக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐஐடி மட் டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து கல்விக் கும் இது ஒரு தொடக்க பயணமாக அமையும்.

இந்த இணையதளம் மூலமாக இக்கல்வி நிறுவ னம் தொடர்பான கேள் விகளை யார் வேண்டு மானாலும் கேட்கலாம். அவர்களுக்கு 48 மணி நேரத்தில் பதில் அளிக்கப் படும். கேள்வி கேட்போ ருக்கான பதில் இ-மெயில் மூலமோ, வாட்ஸ்அப் வாயிலாகவோ அல்லது இரண்டிலுமோ வழங்கப் படும். பிற மாணவர்கள் பயனடையும் வகையில் இணையதளத்திலும் அந்த கேள்விகள் இடம்பெறும்" என்றார்.

No comments:

Post a Comment