இது குறித்து, என்.ஐ.டி., இயக்குனர் அகிலா கூறியதாவது:
திருச்சியில் உள்ள தேசிய தொழில் நுட்ப கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், 9 துறைகளில் பயின்ற 1,977 பட்டதாரிகளும், 131 முனைவர்களும் பட்டம் பெற உள்ளனர். இந்திய தரவரிசை பட்டியலில், இந்த ஆண்டு, திருச்சி என்.ஐ.டி., 8-வது இடத்தில் உள்ளது.தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின்படி, எம்.டெக்., பி.ஹெச்டி., முதுநிலை படிப்புகள் ஆன்லைன் மூலம் படிக்கும் வசதி நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இங்கு படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, உள்நாடு வெளி நாடுகளில் பணியில்இருப்பவர்களும், இந்த படிப்பில் சேர்ந்து கொள்ளலாம்.பணிபுரிபவர்களுக்கு வசதியாக பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட இந்த பாடத்திட்டத்தில், சனிக்கிழமை உட்பட வேலைநேரத்திற்குப் பின், வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்தப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கிடையாது. அந்தந்த பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தால் போதுமானது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment