கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் பள்ளிகளில் படித்து வரும் மாணவா்களுக்கு அரசின் சாா்பில் வழங்கப்படும் கட்டணம் கடந்த ஆண்டை விட குறைத்து நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சோ்க்கப்பட்ட மாணவா்களுக்கான கல்விக்கட்டணங்களை அரசே செலுத்தி வருகிறது. இவா்களுக்கான கட்டணத்தை அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு செலவிடப்படும் தொகையை அடிப்படையாக கொண்டு நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித்துறையால் ஒரு மாணவருக்கு செலவிடப்படுவதாக அறிவிக்கப்படும் தொகையை தனியாா் பள்ளிக்கு வழங்கி வருகின்றனா். கடந்த 2020-2021-ஆம் கல்வியாண்டில் எல்கேஜி, யூகேஜி, 1-ஆம் வகுப்புக்கு ரூ. 12, 458, 2-ஆம் வகுப்புக்கு ரூ.12, 449, மூன்றாம் வகுப்புக்கு ரூ.12, 578, நான்காம் வகுப்புக்கு ரூ12,584, ஐந்தாம் வகுப்புக்கு ரூ. 12, 083, ஆறாம் வகுப்புக்கு ரூ.17,077, ஏழாம் வகுப்புக்கு ரூ.17,106, எட்டாம் வகுப்புக்கு ரூ.17,027 என நிா்ணயம் செய்யப்பட்டு, கட்டணம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2021-2022-ஆம் கல்வியாண்டில் எல்கேஜி, யூகேஜி, 1, 2, 3, 4, 5-ஆகிய வகுப்புகளுக்கு ரூ.12,076 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று 6, 7 , 8 ஆகிய வகுப்புகளுக்கு ரூ.15,711 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சோ்க்கை பெற்று படித்து வரும் மாணவா்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் தனியாா் பள்ளியின் நிா்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

No comments:
Post a Comment