மாணவிகளை கடுமையாக தாக்கிய ஆசிரியர் ஜினேந்திராவை மாவட்ட கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது
கணக்கு பாடத்தை முறையாக படிக்காத 9 வயது மாணவிகளை ஆசிரியர் வகுப்பறையில் கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் என்ற மாவட்டத்தில் உள்ள மமத் கேதா கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இங்கு கணித ஆசிரியராக பணிபுரிபவர் ஜினேந்திரா மோக்ரா. இவர் அங்கு மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க சென்ற போது வகுப்பறையில் மாணவர்களிடம் மிக மோசமாகவும் கடுமையாகவும் நடந்துள்ளார்.
மூன்றாம் வகுப்பில் சுமார் 15 மாணவர்கள் படித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு கணித வீட்டு பாடத்தை ஆசிரியர் தந்துள்ளார். இந்த வீட்டு பாடத்தை ஒரு மாணவி முறையாக செய்து வராத நிலையில், அந்த ஒன்பது வயது சிறுமியை சுமார் ஆறு தடவை அடித்து தாக்கி தண்டித்துள்ளார்.
பின்னர் மற்றொரு மாணவியை அழைத்த அவர், ஒன்று முதல் எண்களை வரிசையாக கூற சொல்லியுள்ளார். அந்த மாணவி 35 வரை எண்ணியப் பின் அடுத்த எண்ணை கூறி திணறியுள்ளார். உடனடியாக ஆத்திரத்துடன் அந்த 9 வயது சிறுமியை முகத்திலும் தலையிலும் கடுமையாக அடித்து தாக்கியுள்ளார். கலங்கிப்போன மாணவி பீதியுடன் திரும்பி சென்று தனது இடத்தில் அமர்ந்துகொண்டார். ஆசிரியரின் இந்த செயல்களால் வகுப்பறையில் இருந்த ஒட்டுமொத்த மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தனர்.
ஆசிரியர் மாணவிகளை தாக்கும் காட்சியை வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் யரோ பரப்பிய நிலையில், இது பெரும் விவாதத்தை கிளப்பியது. இதை தொடர்ந்து அம்மாவட்ட கல்வி அலுவலர் கேசி சர்மா சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், ஆசிரியர் ஜினேந்திராவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
CLICK HERE TO WATCH THE VIDEO

No comments:
Post a Comment