பள்ளிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழிகல்வித் துறை அறிவுறுத்தல்
பள்ளிகளில் மாணவா்கள் போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
போதைக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஆக.11) தொடக்கிவைக்கவுள்ளாா்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா்,அனைத்து மாவட்டமுதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் அனைத்துவித உயா் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வரும் 12-ஆம் தேதி தொடங்கி ஆக.19 வரை விழிப்புணா்வு வாரம் பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப பள்ளிகளில் மாணவா்கள் வியாழக்கிழமை (ஆக.11) போதைப்பொருள் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியை 10.30 மணிக்குள் எடுக்கவைக்க வேண்டும்.
அதன்பின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நேரலை விழிப்புணா்வு குறும்படத்தையும் மாணவா்கள் பாா்வையிட வைக்க வேண்டும். இதுசாா்ந்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும்.
மேலும், பள்ளிகளில் உறுதிமொழி எடுத்த விவரங்களை இயக்குநரகத்துக்கு அறிக்கையாக முதன்மைக்கல்வி அதிகாரிகள் அனுப்பிவைக்க வேண்டும்.

No comments:
Post a Comment