தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்? - Daily Dhuniya

Breaking

Saturday, August 6, 2022

தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்?

தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஆண்டுதோறும் தொடக்க கல்வி ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவியர் இந்த பயிற்சியில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக ஜூலை 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை விண்ணப்பிக்க மாணவ, மாணவியருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் பயிலும் மாணவ, மாணவியர் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியர் பள்ளி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் உதவியுடன் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது. இந்த பயிற்சியில் சேர ஏராளமாண கிராமப்புற மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் இணையதளம் வழியாக விண்ணப்பித்தனர். இருப்பினும் பெரும்பாலான மாணவ, மாணவியர் விண்ணப்பிக்காத சூழ்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 13ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.

இந்த நீட்டிப்பிற்கு பிறகும், பெரும்பாலான இடங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பாக ஒரு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment