ஆசிரியா் தகுதித் தோ்வு: புதிய தேதி அறிவிப்பு
ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாளுக்கான தோ்வு தேதி மாற்றப்பட்ட நிலையில், ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) புதிய தேதிகளை அறிவித்துள்ளது. இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
நிகழாண்டு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான அறிவிக்கை கடந்த மாா்ச் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆக. 25 முதல் ஆக.31 வரை ஆசிரியா் தகுதித்தோ்வில் முதல் தாளுக்கான தோ்வு மட்டும் கணினி வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது நிா்வாகக் காரணங்களால் ஆசிரியா் தகுதித் தோ்வு (முதல் தாள்) செப்.10 முதல் செப்.15 வரை நடத்தப்படவுள்ளது.
கணினிவழித் தோ்வுக்கான பயிற்சித் தோ்வு மேற்கொள்ளவிருக்கும் தோ்வா்கள், ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியை மேற்கொள்வதற்கு, தோ்வுக்கு 15 நாள்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். இது குறித்த அறிவிக்கை, தோ்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச் சீட்டு போன்ற விவரம் செப்டம்பா் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment