தியாகதுருகம் அருகே பள்ளி மாணவி தற்கொலை - காதலர் குடும்பத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு. - Daily Dhuniya

Breaking

Monday, August 8, 2022

தியாகதுருகம் அருகே பள்ளி மாணவி தற்கொலை - காதலர் குடும்பத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு.

கள்ளக்குறிச்சி அருகே 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் காதலர் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தியாகதுருகம், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே 12 வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காதலரின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment