அகவிலைப்படி உயர்வில் ஒருபோதும் கைவைக்காதீர்கள்ப்ளீஸ்
ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்படும் நடப்பு விலைவாசி உயர்வுக்கேற்ப அகவிலைப்படி கணக்கிடப்பட்டு ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தில் உயர்த்தி வழங்கப்படுவது தொடர் நடைமுறையாகும். இந்நடைமுறை ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளை அடிப்படையாகக் கொண்டு ஓரிரு மாதங்கள் கடந்து அறிவிக்கப்பட்டாலும் அவற்றை முன்தேதியிட்டே வழங்குவர். அண்மையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் கடந்த ஜனவரி 1 முதல் வழங்கப்பட்டு விட்டது.
அந்தந்த மாநில அரசுகள் மத்திய அரசுக்கிணையான மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் (ஊதிய முரண்பாடுகள் நிறைய உள்ளன) அதன்பின் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வழங்குவர். இந்த நடைமுறை தமிழகத்திலும் உண்டு.
அந்த வகையில் அதிகபட்சம் கடந்த காலங்களில் மார்ச் இறுதியில் அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு அறிவிக்கப்பட்டு நிலுவையுடன் ஏப்ரல் மாத ஊதியத்தில் அனைத்து வகையான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் முதலானோர் ஆட்சி பாகுபாடின்றி பயனடைந்து வந்துள்ளனர். தேர்தல் காலங்களில் கூட தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தவிர்ப்பு அனுமதி பெற்று அகவிலைப்படி ஊதிய உயர்வை வழங்கிய நடைமுறைகளும் இங்குண்டு.
இவற்றைப் புறந்தள்ளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராடிப் பெற்ற வாழ்வாதார அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் நிதிச்சுமை காரணமாக இன்னும் ஓரிரு மாதங்களில் அடுத்த அகவிலைப்படி ஊதிய உயர்வு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஜனவரி 1 முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படியை வழங்காமல் 6 மாத காலம் தாழ்த்தி ஜூலை 1 முதல் பெற்றுக்கொள்ள விடுதலைத் திருநாள் அமுதப் பெருவிழா அன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய நடைமுறை கடந்த முறையும் கடைபிடிக்கப்பட்டதில் பல்லாயிரம் ரூபாயை இழந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் மிகுந்த மன வருத்தத்தையும் புதிய ஆட்சி மீதான அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது என்பது மறுப்பதற்கில்லை. அதே நடைமுறையினைத் தற்போதும் கடைபிடிக்கும் நோக்கும் போக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் தீராத வலியைத் தோற்றுவித்துள்ளது அறியத்தக்கது.
ஒன்றிய அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக எரிபொருள் விலை உயர்வு, குழந்தைகள் பயன்படுத்தும் எழுதுபொருள்கள், உயிர் காக்கும் மருந்து வகைகள், காப்பீடு, உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் கூடுதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, ஊக்க ஊதியம் பறிப்பு, ஒப்படைப்பு ஊதியம் நிறுத்தம் போன்றவற்றால் வேறு வருமானம் இன்றி மாத ஊதியத்தை மட்டுமே நம்பியிருக்கும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் நிம்மதியை இது சீர்குலைப்பது போலிருக்கிறது.
இதே காலகட்டத்தில் ஒன்றிய அரசின் ஆளுமையின் கீழ் பணிபுரியும் அனைத்து வகையான இந்திய ஆட்சிப் பணி உயர் அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2022, ஜனவரி 1 முதற்கொண்டு தம் அடிப்படை ஊதியத்தில் 34% அகவிலைப்படியைத் தொடர்ந்து தடையின்றிப் பெற்று வருவது எண்ணத்தக்கது. விலைவாசியைப் பொருத்தவரை ஒன்றிய, மாநில அரசு ஊழியர்களிடையே எந்தவொரு சலுகையையும் யாரும் எப்பொழுதும் வழங்க முன்வருவதில்லை. அது நடைமுறை சாத்தியமும் இல்லை.
இத்தகைய 'நடுவில் ஆறு மாத காலம் அகவிலைப்படி அபகரிக்கப்பட்ட காலம்' காரணமாக சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் குடும்பத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவ்வப்போது அரசால் உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வால் கிடைக்கப்பெறும் ஊதியத்தின் ஒரு பகுதியை ஏதேனும் ஒரு வகையில் சேமித்து அதைத் தம் பிள்ளைகளின் உயர்கல்வி செலவு, திருமண செலவு, வீடு கட்டுதல் போன்றவற்றிற்குப் பயன்படுத்தி வந்தது கண்கூடு.
அரசின் இயந்திரத்தை சரியான வழியில் இயக்கிக் கொண்டு செல்ல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது அவர்களின் வாழ்வாதார உரிமைக்குத் தோள் கொடுப்பதென்பது ஆட்சியாளர்களின் கடமையாகும். நிதிநிலை சார்ந்த கருத்து முரண்பாடுகள் மற்றும் நிதி நெருக்கடிகள் இருப்பினும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன்களைப் பேணிக் பாதுகாப்பதும் அரசின் கடமை என்று கருதாமல் புறந்தள்ளுதல் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
எனவே, இனியும் காலம் கடத்தாமல் தமிழக அரசானது ஒன்றிய அரசு ஜனவரி 1, 2022 முதல் அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ள 3% அகவிலைப்படி ஊதிய உயர்வை உடனடியாக மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் முன்தேதியிட்டு தற்போது வெளியிடப்பட்ட அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணைகளில் தக்க திருத்தம் செய்து 01.01.2022 அன்று முதல் வழங்கி இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்ப நலன்காத்து தாயுள்ளம் கொண்ட முதல்வர்களின் முதல்வர் உதவுவார் என்று பெரும் நம்பிக்கையுடன் நல்லதொரு விடியலை எதிர்நோக்கியுள்ளோம்.
முனைவர் மணி கணேசன்

No comments:
Post a Comment