சென்னை, கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பேசிய முதல்வர், “கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கடந்த 2.11.2021 அன்று நான் தொடங்கி வைத்தேன். பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ, பி.எஸ்.சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 4 பிரிவுகளோடு இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது.
கடந்த 3.12.2021 அன்று சைவ சித்தாந்த சான்றிதழ் படிப்புக்கான புதிய வகுப்பு 100 மாணவர்களுடன் தொடங்கி வைக்கப்பட்டது. முதலாம் ஆண்டில் 220 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் கட்டணம் இல்லாமல் பயில ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது, மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் முதலாம் ஆண்டு வகுப்புகள் நிறைவு பெற்று பல்கலைக்கழக தேர்வுகள் முடிவுற்று 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளீர்கள்.
இந்த கல்வி ஆண்டில் ஏற்கனவே இருக்கக்கூடிய 4 பாடப்பிரிவுகள் மட்டுமல்லாமல் புதிதாக பி.ஏ. சைவ சித்தாந்தம் என்ற பாடப் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் இருக்கக் கூடிய 240 இடங்களுக்கு 1,089 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது என்பதை நான் இங்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
5-ல் ஒருவருக்குத்தான் இடம் தர முடியும் என்ற அளவிற்கு இக்கல்லூரி குறுகிய காலத்தில் செல்வாக்கை அடைந்துள்ளது. இதற்கு காரணமான அறநிலையத் துறையையும், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் அனைவரையும் நான் பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்.
2-ம் ஆண்டு கல்வியானது இன்று முதல் தொடங்குகிறது. இதனை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு புதிதாக சேர இருக்கும் மாணவ - மாணவிகள் மட்டுமின்றி, முதலாம் ஆண்டு தேர்ச்சி பெற்று 2-ம் ஆண்டு சேரும் மாணவ - மாணவிகளும் கல்வி கட்டணமின்றி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

No comments:
Post a Comment