NLCல் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் பணி - Daily Dhuniya

Breaking

Saturday, August 20, 2022

NLCல் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் பணி

பொறியியல் முடித்துள்ளீர்களா? என்.எல்.சியில் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் பணி.

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமான என்.எல்.சி.,யில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான பணி வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வாகும் நபர்களுக்கு ஊதிய வரம்பு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை ஆகும்.

என்.எல்.சி., நிறுவனம் நிலக்கரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனம்.

இந்நிறுவனத்திற்கு நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்கம், அனல்மின் நிலையம், ஒடிஷாவில் நிலக்கரி சுரங்கம், நெல்லையில் காற்றாலை மின் உற்பத்தி, அந்தமானில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

இந்நிலையில் செயற்பொறியாளர்கள் மற்றும் நிர்வாகப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதாக என்.எல்.சி., விளம்பரம் வெளியிட்டுள்ளது.

மெக்கானிக்கலில் பொறியியல் முடித்தவர்களுக்கு 96 செயற்பொறியாளர் பணியிடங்கள் உள்ளன. அவர்கள் அனல்மின் நிலையம் மற்றும் சுரங்கங்களில் பணியமர்த்தப்படுவர்.

எலெக்ட்ரிக்கலில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு 48 பணியிடங்கள் உள்ளன. அவர்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், அனல்மின் நிலையம், சுரங்கங்களில் உள்ள பணிகளுக்கு அமர்த்தப்படுவார்கள்.

அதே போல் சிவில் பொறியாளர்களுக்கு 12 காலிப் பணியிடங்கள் உள்ளன. அவர்களும் மேற்கூறிய துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும் சுற்றுச்சூழல் பொறியாளர்கள், தொழில்துறை பொறியாளர்கள், கெமிக்கல் பொறியாளர்களுக்கும் 2 முதல் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர்.

இது தவிர சயின்டிபிக் துறை, புவியியல் துறை, மனிதவளத் துறை, மக்கள் தொடர்பு மற்றும் சட்டத்துறைகளுக்கான மேலாளர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளனர்.

இதற்கான தகுதி, முக்கிய தேதிகள், ஆன்லைன் விண்ணப்பம், வயது வரம்பு, இடஒதுக்கீடு மற்றும் தேர்வு முறை ஆகியவை ஆகஸ்ட் 25 அன்று என்.எல்.சி.,யின் வேலைவாய்ப்பு பக்கத்தில் விரிவாக வெளியாகும். விளம்பரங்களிலும் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment