பல்கலை தேர்வில் ஆள்மாறாட்டம் - Daily Dhuniya

Breaking

Sunday, August 14, 2022

பல்கலை தேர்வில் ஆள்மாறாட்டம்

Thiruvarur Thiruvarur Thiruvarur Government Art College, Tamil Nadu Open University Distance Courses Semester Examination has started on 5th. The exam will be conducted on Saturday and Sunday only.

Yesterday afternoon, the second year examination of Bachelor was held. Bhaskar has come to the examination hall. The invigilator has checked the identity card and admit card of the candidates. There is a difference between the person who said Bhaskar and the photo pasted on it. The picture pasted on the identity card is that of Tiruvarur District BJP President.

In this regard, the examination room superintendent informed the examination officer. It was revealed that the person who had come to write the exam was Divakaran, 29, of Sabapati Mudaliar Street, Tiruvarur. Divakaran said that he had come to write the exam for Tiruvarur district BJP leader Bhaskar.

Following the complaint, Tiruvarur taluk police are interrogating Divakaran. In a statement issued by BJP district president Bhaskaran, 'I have no relation with the person who wrote the bachelor's exam. They are spreading such false news as revenge for my political development', he said.

திருவாரூர் திரு.வி.க., அரசினர் கலைக் கல்லூரியில், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு, கடந்த, 5ம்தேதி துவங்கி நடந்து வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இத்தேர்வு நடைபெறும்.

நேற்று மதியம், இளங்கலை இரண்டாம் ஆண்டு தேர்வு நடந்தது. பாஸ்கர் என்பவர், தேர்வு அறைக்கு வந்துள்ளார். தேர்வு எழுதுபவர்களின் அடையாள அட்டை மற்றும் நுழைவுச் சீட்டை கண்காணிப்பாளர் பரிசோதனை செய்துள்ளார். பாஸ்கர் என கூறியவருக்கும், அதில் ஒட்டப்பட்டு இருந்த புகைப்படத்துக்கும் வித்தியாசம் இருந்துள்ளது. அடையாள அட்டையில் ஒட்டப்பட்டிருந்த படம், திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் ஆவார்.

இதுகுறித்து,தேர்வு நடத்தும் அலுவலருக்கு, தேர்வு அறை கண்காணிப்பாளர் தகவல் கொடுத்தார். தேர்வு எழுத வந்தவர், திருவாரூர், சபாபதி முதலியார் தெருவைச் சேர்ந்த திவாகரன், 29,என்பது தெரியவந்தது. திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் பாஸ்கர் என்பவருக்காக, தேர்வு எழுத வந்ததாக திவாகரன் தெரிவித்துள்ளார்.

புகாரையடுத்து, திருவாரூர் தாலுகா போலீசார் திவாகரனிடம் விசாரிக்கின்றனர். பா.ஜ.,மாவட்ட தலைவர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இளங்கலைத் தேர்வு ஒன்றை எழுதிய நபருக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. என் அரசியல் வளர்ச்சியால் பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தகைய பொய் செய்தியை பரப்பி வருகின்றனர்' என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment