இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!! - Daily Dhuniya

Breaking

Saturday, August 13, 2022

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

2022 – 23ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவம் சார்ந்த கல்விப்பிரிவுகளில் விண்ணப்பிக்க அவகாசம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துளளது.

மருத்துவ சார்ந்த பாராமெடிக்கல் பட்டப்படிப்புகளில், பி.பார்ம் ( லேட்டரல் என்ட்ரி), பி.எஸ்.சி நர்சிங் (போஸ்ட் பேசிக்), மனநல மருத்துவம் பட்டயபடிப்பு ( போஸ்ட் பேசிக்), செவிலியர் பட்டயப்படிப்பு ( பெண்களுக்கு), மருத்துவம் சார்ந்த பாரா மெடிக்கல் பட்டயபடிப்புகளில் சேர கடந்த 1ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த படிப்புகளில் 2536 இடங்கள் உள்ளன. படிவங்கள் tnmedicalselection.org மற்றும். tnhealth.tn.gov. in என்ற இணையதளங்களில் பெறலாம். இந்த விண்ணப்பங்கள் 12ஆம் தேதி வரை மட்டுமே ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய குடிமகனாகவும், தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும் இருக்க வேண்டும். அதேபோன்று, தமிழ்நாடு அரசு செவிலியர் பயிற்சி கல்லூரிகளில் உள்ள செவிலியர் பட்டயப் படிப்பில் 2060 இடங்கள் உள்ளன.

இந்திய குடிமகனாகவும், தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட பெண் விண்ணப்பபதாரர்கள் இந்த பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு tnmedicalonline.co.in என்ற இணைய பக்கத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment