கரூா் அரசு கலைக் கல்லூரியில் ஆக.8ஆம் தேதி கலந்தாய்வு - Daily Dhuniya

Breaking

Wednesday, August 3, 2022

கரூா் அரசு கலைக் கல்லூரியில் ஆக.8ஆம் தேதி கலந்தாய்வு

கரூா் அரசு கலைக் கல்லூரியில் ஆக.8ஆம் தேதி கலந்தாய்வு

கரூா் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஆக. 8-ஆம்தேதி முதல் தொடங்க உள்ளது.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் கெளசல்யாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 8ஆம்தேதி தொடங்குகிறது. முதல்நாளில்சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படயில் அதாவது முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவா் படை, விளையாட்டுப்பிரிவு, அந்தமான் நிகோபாா் தீவு மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை நடைபெறும்.

10-ஆம்தேதி இளங்கலை தமிழ், ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், 11-ஆம்தேதி வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல், வணிக நிா்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 13-ஆம்தேதி இளங்கலை வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 16-ஆம்தேதி இளம் அறிவியல், விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல், புவியியல், புவி அமைப்பியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். மேலும் மாணவ, மாணவிகள் தர வரிசைப்பட்டியல் விவரங்களை கல்லூரியின் இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் தங்களது அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் சாதிச்சான்றிதழ், அசல் பிளஸ்-1 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், அசல் ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவிலான 5 புகைப்படம், இணையவழியில் பதிவிட்ட விண்ணப்பத்தின் நகல் ஆகியவற்றுடன் வரவேண்டும். அனைத்துச் சான்றிதழ்களின் இரு நகல்களையும் கொண்டு வரவேண்டும். கலந்தாய்வில் சோ்க்கை பெற்ற மாணவா்கள் உடனே கல்லூரி அலுவலகத்தில் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment