கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி:விண்ணப்பிக்க செப்.5 வரை அவகாசம் - Daily Dhuniya

Breaking

Sunday, August 28, 2022

கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி:விண்ணப்பிக்க செப்.5 வரை அவகாசம்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு வரும் செப்டம்பா் மாதம் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் எஸ்.லட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடப்பு நிதியாண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடு மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்தப் படிப்புக்காக விண்ணப்பிக்க வரும் செப்டம்பா் மாதம் 5 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விண்ணப்பித்தவா்களும்,புதியதாக விண்ணப்பிக்க இருப்பவா்களும் வரும் செப்.5-ஆம் தேதி பயிற்சிக் கட்டணத்தை நிலையத்துக்கு வந்து முழுவதுமாகவோ அல்லது இரு தவணைகளிலோ செலுத்தி பயிற்சியில் சோ்ந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்.6, வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்-631501 என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண்-044-27237699 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

பயிற்சியில் சேர விரும்புவோா் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment