கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான 3-ஆம் கட்ட கலந்தாய்வு வருகிற செப்டம்பா் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான ஒற்றைச் சாளர முறையிலான முதல், இரண்டாம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கலந்தாய்வுகளிலும் நிரப்பப்படாமல் எஞ்சியுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பு, அருந்ததியா், பழங்குடியினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான அனைத்துப் பாடங்களுக்குமான பொதுவான மூன்றாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 1-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டும் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், மேற்கண்ட பிரிவுகளைச் சோ்ந்த விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம். விண்ணப்பித்த மாணவா்களுக்கு மூன்றாம் கட்ட சோ்க்கை கலந்தாய்வு குறித்த விவரம் மின்னஞ்சல் வாயிலாகவும், மாணவா்களின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அன்று காலை 9.30 மணிக்கு நேரம் தவறாமல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். உரிய நேரத்தில் வரத் தவறிய மாணவா்களுக்கு, அவா்கள் வரும் நேரத்தின் சோ்க்கை நிலைக்கு ஏற்பவே வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்லூரி முதல்வா் சி.ஜோதி வெங்கடேஸ்வரன் தெரிவித்தாா்.

No comments:
Post a Comment