சாஸ்த்ரா பல்கலைக்கழக நில ஆக்கிரமிப்பு வழக்கு - தமிழக அரசு 3 நாட்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - Daily Dhuniya

Breaking

Tuesday, August 2, 2022

சாஸ்த்ரா பல்கலைக்கழக நில ஆக்கிரமிப்பு வழக்கு - தமிழக அரசு 3 நாட்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Sastra University Encroachment Case | தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால் மாற்று இடத்தை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால் மாற்று இடத்தை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு ஒதுக்கிய நிலத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்க தயாராக இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு நிலத்தை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து, கட்டிடங்களை எழுப்பிவிட்டு, தற்போது மாற்று இடங்களை வழங்குவதாக பல்கலைக்கழகம் தரப்பு கூறுவதை ஏற்க முடியாது என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

No comments:

Post a Comment