பிஎச்.டி., அட்மிஷன் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 16 - Daily Dhuniya

Breaking

Friday, August 12, 2022

பிஎச்.டி., அட்மிஷன் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 16

பிஎச்.டி., அட்மிஷன்

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் உள்ள எலக்ட்ரானிக் சயின்ஸ் துறையில் வழங்கப்படும் பிஎச்.டி., அறிவியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதி: எம்.எஸ்சி., - எலக்ட்ரானிக் சயின்ஸ் / பிசிக்ஸ் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது எம்.இ., / எம்.டெக்., - எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், யு.ஜி.சி.,யின் விதிமுறைப்படி ஏதேனும் ஒரு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதித்தேர்வு எழுதாதவர்கள் பல்கலைக்கழகம் நடத்தும் எழுத்து தேர்வை அணுக வேண்டும். நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 16

விபரங்களுக்கு: www.caluniv.ac.in

No comments:

Post a Comment