காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள் : ஆக.15ம் தேதி - Daily Dhuniya

Breaking

Tuesday, August 9, 2022

காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள் : ஆக.15ம் தேதி

காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்... !

தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள காவல்துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகியவற்றில் காலியாகவுள்ள 3,552 பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் குறித்த விபரம்: ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல் படையில் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பிரிவுகளில் 3,552 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வயது மற்றும் கல்வித்தகுதி:

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். கடைசி நாள் : ஆக.15ம் தேதி

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

இடஒதுக்கீடு, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பக் கட்டணம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு என்ற www.tnusrb.tn.gov.in

அல்லது https://www.tnusrb.tn.gov.in/pdfs/notification.pdf என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் திறன் மற்றும் போட்டி, சிறப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment