"சரியாக படிக்கவில்லை" என கண்டித்த பெற்றோர் - மாணவன் எடுத்த விபரீத முடிவு
கோயம்பேட்டில் 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரும்பாக்கம், வள்ளுவர் சாலை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி தினேஷ் அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தினேஷ் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்து விட்டு கடைக்கு சென்றுள்ளனர். பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த தினேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment