பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு வரும் செப். 10 ஆம் தேதி தொடங்கும் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சனிக்கிழமை அறிவித்தாா்.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டு 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சோ்க்கை கலந்தாய்வு கடந்த ஆக. 20- இல் தொடங்கியது. முதலில் சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. ஆக. 25 முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு முடிவுகள் வெளியிடப்படாததால், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சா் பொன்முடி அறிவித்தாா்.
இதற்கிடையே, நீட் தோ்வு முடிவுகள் செப். 7-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வுக்கான புதிய அட்டவணையை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சனிக்கிழமை வெளியிட்டது.
நான்கு கட்டங்களாக... இதுகுறித்து உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு வரும் செப். 10 முதல் நவ. 13 வரை நான்கு கட்டங்களாக நடைபெறும்.
செப். 10 முதல் 12 வரை முதல் கட்டமாகவும், செப். 25 முதல் 27 வரை இரண்டாம் கட்டமாகவும், அக். 13 முதல் 15 வரை மூன்றாம் கட்டமாகவும், அக். 29 முதல் 31 வரை நான்காம் கட்டமாகவும் கலந்தாய்வு நடைபெறும்.
நவ. 15 முதல் 17- ஆம் தேதி வரை இணையவழியில் துணைக் கலந்தாய்வு நடைபெறும். மேலும், ஆதிதிராவிடா் மற்றும் அருந்ததியா் பிரிவுக்கான கலந்தாய்வு நவ. 19 முதல் 20- ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறும்.
நிகழாண்டு முதல் பொறியியல் பாடங்களில் தமிழ்ப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பொறியியலில் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு பொறியியல் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதேபோல் எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
ஆக. 30-இல் முதல்வா் தலைமையில்... முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆக. 30- ஆம் தேதி துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டங்களில் கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகளுடன் ஆலோசித்து, அரசுக் கல்லூரிகளுக்கு எந்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து, அதனடிப்படையில் கலந்தாலோசித்து, கூடுதல் இடங்களை அதிகரிப்பது குறித்து அன்றைய தினம் மாலையில் அறிவிக்கப்படும்.
கூட்டத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்படும். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்ட தமிழ், ஆங்கிலப் பாடங்கள் நடைமுறைப்படுத்தப்படும். பொறியியல் கல்லூரிகளில் மீண்டும் தமிழ் வழியில் பாடங்களைப் படிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

No comments:
Post a Comment