TNPSC - இணைய வழி விண்ணப்பங்களில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பித்த பிறகு மாற்றங்கள் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவது தொடர்பான செய்தி வெளியீடு - 20/07/2022 - Daily Dhuniya

Breaking

Wednesday, July 20, 2022

TNPSC - இணைய வழி விண்ணப்பங்களில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பித்த பிறகு மாற்றங்கள் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவது தொடர்பான செய்தி வெளியீடு - 20/07/2022

TNPSC - இணைய வழி விண்ணப்பங்களில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பித்த பிறகு மாற்றங்கள் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவது தொடர்பான செய்தி வெளியீடு - 20/07/2022
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீடு

செய்தி வெளியீட்டு எண்.51/2022

நாள் 18.072022

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணையவழியே பெற்றுவருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் போது அறியாமல் சில தகவல்களை தவறாகப் பதிவு செய்துவிடுகின்றனர். இதனால் ஒருசில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்க தேர்வாணையம், விண்ணப்பதாரர்கள் ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கென தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் வரை மாற்றிக்கொள்ள வழிவகை செய்துள்ளது.

இதையும் படிக்க | பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடைசி நாளில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் பல விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்ய போதுமான கால அவகாசம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனை கனிவுடன் பரிசீலித்த தேர்வாணையம், அவ்வாறு விவரங்களை தவறாக பதிவு செய்து சமர்ப்பித்த விவரங்களை மாற்றிக்கொள்ள மற்றுமொரு வாய்ப்பளிக்கலாம் என முடிவு செய்துள்ளது.

அதன்படி, தேர்வாணையத்தால் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கான இணையவழி விண்ணப்பங்களில், விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த விவரங்களை, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வரை மாற்றிக்கொள்ள வாய்ப்பு அளிப்பதுடன், விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் முடிந்த பின்னர் நான்கு நாட்கள் கழித்து, விண்ணப்ப தகவல்களை சரிபார்த்து மாற்றிக்கொள்ள 3 நாட்கள் (Application Correction Window Period) வழங்கப்படும்.

இந்த மூன்று நாட்களில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் தகவல்களை தவறாகப் பதிவு செய்திருந்தால், அதனை மாற்றி சரியான தகவல்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை மீண்டும் ஒருமுறை சரி பார்த்துக்கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பத்தில் பதிவு செய்த விவரங்களை, விண்ணப்பம் திருத்தம் செய்யும் காலத்தில் மாற்றும் போது அதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார். விண்ணப்பம் நேர்செய்யும் (Application Correction Window Period) காலத்திற்கு பின்னர் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்திலுள்ள விவரங்களை மாற்ற முடியாது

இதையும் படிக்க | மாநில பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் 162 கேள்விகள்: தமிழக பள்ளிக்கல்வித் துறை தகவல்

விண்ணப்பத்திலுள்ள விவரங்களை மாற்றக்கோரி தேர்வாணையத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள், கடிதங்கள், மின்னஞ்சல் போன்றவற்றின் மீது தேர்வாணையத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. எனவே விண்ணப்பதாரர்கள் இந்த விண்ணப்ப நேர்செய்யும் / திருத்தம் செய்யும் கால அவகாசத்தினை சரியான முறையில் பயன்படுத்தி சரியான தகவல்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

பி. உமா மகேஸ்வரி இஆப,

செயலாளர்

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment