இடைநிலை ஆசிரியர் நியமனம் நிரந்தரமாக நியமிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் திரு ந.ரெங்கராஜன் வேண்டுக்கோள்:-
தமிழகத்தில் அரசின் திட்டங்களாலும், ஆசிரியர்களின் அயராத உழைப்பினாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கைக்கு இணையாகவும், மாணவர்கள் கற்றலில்தொய்வு ஏற்படாமல் இருக்கவும், ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தற்போது தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தகுதி தேர்வு முடித்து ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதால், தற்காலிகமாக ஓராண்டிற்கு பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலம் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு படித்து வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கும், அரசு பள்ளிகளில் கற்பித்தல் திறன் அதிகரிக்கும் என நம்பி குழந்தைகளை சேர்த்த பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிரந்தர ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களால் மட்டுமே சிந்தனை குறுக்கீடுகள் இல்லாமல் நிம்மதியாக பணியாற்ற முடியும். அப்போதுதான் கற்பித்தல் திறன் அதிகரிக்கும் என பெற்றோர்கள் முழுமையாக நம்புகிறார்கள். இது உளவியல் ரீதியான உண்மையும்கூட. படித்து நிரந்தர பணியிடத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை வாய்ப்பு என்று ஏற்படும்போது மனதில் சலிப்பு தோன்றுவது இயல்பான ஒன்றுதான்.
சமீபத்தில் உபி மாநில அரசு தொகுப்பூதிய திட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவித்து செயல்படுத்தி வருகிறது. வட இந்திய செயல்பாடுகளை அப்படியே காப்பி அடித்து செயல்படுத்தி வரும் தமிழக அதிகாரிகள் நமது கல்வித் துறையிலும் அதை புகுத்த நினைக்கிறார்கள்.
தொகுப்பூதிய பணி என்பது உழைப்பு சுரண்டல் என்று கருதுவதால், இனி தொகுப்பூதியத்தில் பணி நியமனங்கள் இருக்காது என முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் கொள்கை பிரகடனமாக அறிவித்து செயல்படுத்தி வந்தார்கள்.
இதுதான் நமது திராவிட மாடலும் கூட. திராவிட மாடலை உயர்த்திப் பிடித்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என்பதை ஏற்கக் கூடாது.
தமிழகத்திற்கு என்று தனித்த சிந்தனை உண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில், தலைவர் கலைஞர் அவர்களை பின்பற்றி தொகுப்பூதிய பணியிடம் என்ற சொல்லையே நீக்கிடும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி முடிக்க காலதாமதம் ஏற்படும் என்ற நிலையிருந்தால் ஏற்கனவே படித்து முடித்து தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்று காத்திருப்பவர்களை பணி நியமனம் செய்திட வேண்டும்.
தகுதித் தேர்வை ரத்து செய்வோம் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருப்பதை மனதில் நிறுத்தி, தகுதி தேர்வு திட்டத்தை ரத்து செய்து வேலைவாய்ப்புகள் முன்னுரிமையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பமுற்பட்டால் இது போன்ற காலதாமதங்களுக்கு வேலையில்லை. எனவே அரசால் நடத்தி முடிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் மட்டுமே போதுமானது என கொள்கை பிரகடனம் செய்து, உடனடியாக ஆசிரியர்களை வேலைவாய்ப்பக முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்திட வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியம் முரண்பாடு களையப்பட வேண்டும். ஈட்டிய விடுப்பு, ஊக்க ஊதியம், அகவிலைப்படி உயர்வு என பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து நிலுவையிலேயே இருந்தாலும் அவைகள் எல்லாவற்றையும் விட தலையாய கோரிக்கையாக, நிரந்தர பணியாளர்களாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற இக்கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி கல்வி நலன், மாணவர்களின் நலன், எதிர்கால தமிழகத்தின் நலன் காக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
ந.ரெங்கராஜன்
பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments:
Post a Comment