தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டி - Daily Dhuniya

Breaking

Friday, July 29, 2022

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 23 மாணவா்கள் பங்கேற்ற நிலையில் 5 போ் சிறப்பிடம் பெற்று பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சீ.சந்தானலட்சுமி தொடக்கி வைத்தாா். இதில் மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 23 மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில், 5 மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். இதில் முதல் பரிசு ரூ.5,000 ஆவடி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி நை.ஆஷிகா பிா்தவ்ஸ், 2-ஆவது பரிசு ரூ.3,000 திருபாச்சூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி இவாஞ்சலின், 3-ஆவது பரிசு ரூ.2,000 சோழவரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.சாருமதி ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.

அதேபோல், அரசுப் பள்ளியில் பயிலும் அம்பத்தூா் பெருந்தலைவா் காமராஜா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி மு.பிரவீணா, குருவாயல் அரசு மேல்நிலைப்பள்ளி வி.பிரவீணா ஆகியோருக்கு சிறப்பு பரிசு தலா ரூ.2,000 வழங்கப்பட உள்ளன.

இப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகையுடன், பாராட்டு சான்றிதழும் மாவட்ட ஆட்சியரால் பின்னா் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment