பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை துவக்கம்
திருவள்ளூர்: செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக்கில், நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டையில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, 2018- - 19ம் கல்வியாண்டு முதல், இயங்கி வருகிறது.
இக்கல்லூரியில், நடப்பு 2022- - 23 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் https://www.tnpoly.in என்ற இணையதள வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.கடந்த 23ம் தேதி துவங்கிய மாணவர் சேர்க்கை, வரும் 8ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இத்தகவலை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment