அக்னிபத்: ராணுவம், கடற்படையில் சேர விண்ணப்பம் இன்று துவக்கம் - Daily Dhuniya

Breaking

Friday, July 1, 2022

அக்னிபத்: ராணுவம், கடற்படையில் சேர விண்ணப்பம் இன்று துவக்கம்

'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று (ஜூலை 2) விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ராணுவத்தின் முப்படைகளிலும் 17.5 வயது முதல் 21 வரை உள்ளவர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரிய 'அக்னிபத்' என்ற திட்டம் கடந்த 14ம் தேதி அறிவிக்கப்பட்டது. பின் 16ல் வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது.

இந்திய விமானப்படையில் 24ம் தேதி முதல் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கியது.

நாடு முழுதும் நேற்று முன்தினம் வரை 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment