ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ராணுவத்தில் இணைய தயாராக உள்ள மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்ய கொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் குறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அவிநாசி டி.இ.ஏ பொது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
ராணுவத்தில் இணைய தயாராக உள்ளவர்கள், இணையதளத்தில் ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த முகாமில் 17 வயது முதல் 21 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டும் பங்கேற்க முடியும். ராணுவத்தில் காலியாக உள்ள சோல்ஜா் ஜெனரல் டியூட்டிட், சோல்ஜா் டெக்னிக்கல், சோல்ஜா் கிளா்க், ஸ்டோா் கீப்பா் ஆகிய பணியிடங்களுக்கு தோ்வு நடக்கிறது.
இந்த பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சோல்ஜா் டிரேட்ஸ்மேன் பணிக்கு 8ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குப் பின் அனுமதிச் சீட்டு வழங்கப்படும். இணையதளத்தில் இருந்து அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment