ஊசியால் முகப்பருவை அகற்றியதால் 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சேவத்தான் என்பவரின் மகன் அங்குள்ள அரசுப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி அப்பள்ளி ஆசிரியை மகாலட்சுமி என்பவர் மாணவனின் தந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, மாணவனின் முகம் வீங்கியுள்ளதாகவும் உடனே அழைத்துச் செல்லும்படியும் கூறினார். பள்ளிக்கு சென்று தந்தை மாணவனிடம் விசாரித்த போது, ஆசிரியை தனது முகத்தில் இருந்து பருவை ஊசியால் குத்திவிட்டதாக சிறுவன் கூறினான்.
பாகாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதனைத் தொடர்ந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

No comments:
Post a Comment