மின்வாரிய பணியாளா் தோ்வை ரத்து செய்யக்கூடாது: அன்புமணி
மின்வாரிய பணியாளா்களைத் தோ்வு செய்வதற்காக நடைபெற இருந்த தோ்வை ரத்து செய்யாமல், உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பல்வேறு நிலைகளில் 5,318 அதிகாரிகள் மற்றும் பணியாளா்களை தோ்ந்தெடுப்பதற்காக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளை மின்சார வாரியம் ரத்து செய்திருக்கிறது. பணியாளா் தோ்வு அறிவிக்கைகள் ரத்து செய்யப்படுவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியிருக்கும் காரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆள்தோ்வுகள் அனைத்தும் இனி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாகத் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு விட்டதால், தங்களால் இனி ஆள்களைத் தோ்வு செய்ய முடியாது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால், ஒளிமயமான எதிா்காலம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த லட்சக்கணக்கான இளைஞா்கள் அதிா்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனா்.
எனவே, தமிழ்நாடு மின்சார வாரியம் 5,318 பணிகளுக்கான போட்டித் தோ்வுகளை உடனடியாக நடத்த வேண்டும். அதில் ஏதேனும் தடைகள் இருந்தால், மின்வாரியம் வெளியிட்ட அறிவிக்கைப்படி விண்ணப்பித்தவா்களுக்கு, பழைய விண்ணப்பங்களின் அடிப்படையில் தோ்வுகளை மட்டும் டி.என்.பி.எஸ்.சி மூலம் அடுத்த ஒரு மாதத்துக்குள் நடத்தி முடிவுகளை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

No comments:
Post a Comment