மின்கம்பியாள் உதவியாளர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல் - Daily Dhuniya

Breaking

Saturday, July 23, 2022

மின்கம்பியாள் உதவியாளர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்

கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை:

திருவள்ளூர் மாவட்டத்தில் 2022ம் ஆண்டு செப்டம்பர் 24, 25ம் தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிக்கான தேர்வு நடைபெறுகிறது. தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடம் இருந்தும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்களிடம் இருந்தும் மற்றும் தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தால் நடத்தப்பட்ட மின்சார பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதையும் படிக்க | TAMILNADU ENGINEERING ADMISSION - 2022 - EMINENT SPORTSPERSON - CERTIFICATE VERIFICATION SCHEDULE - PHASE I - PDF

விண்ணப்பதாரர் மின் வயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும் விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. தேர்விற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்க குறிப்பேட்டினை skilltraining.tn.gov.in/DET என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு மையங்களாக உத்தேசிக்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்து அத்தேர்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும். வடசென்னை, ஈரோடு, நாகப்பட்டினம், கோவை, திருச்சி, ராமநாதபுரம், சேலம், உளுந்தூர்பேட்டை, திருநெல்வேலி, நாமக்கல் தஞ்சாவூர் சிவகங்கை, கடலூர், மதுரை, திருப்பூர், கரூர், தேனி, தர்மபுரி, பெரம்பலூர், தூத்துக்குடி, திண்டிவனம், திண்டுக்கல், விருதுநகர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, வேலூர், தென்காசி, நாகர்கோவில், திருவண்ணாமலை, அம்பத்தூர், குன்னூர், செங்கல்பட்டு, அரியலூர், ஓசூர், நீடாமங்கலம் ஆகிய இடங்களில் அனுப்பி வைக்கலாம்.

இதையும் படிக்க | மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்கு டிஜிட்டல் தளம்: 25-இல் தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

போதுமான விண்ணப்பங்கள் பெறப்படாத நிலையில் மேற்கண்ட தேர்வு மையங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு அங்கு தேர்வுகள் நடைபெறும். தேர்வு மையம் இறுதி செய்வது தொடர்பாக துறைத் தலைவரின் முடிவே இறுதியானது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு கிடைக்க வேண்டிய கடைசி நாள் வரும் 26ம் தேதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment