திருப்பூரில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மாணவ, மாணவிகள் பிரம்மாண்ட செஸ் மேடை அமைத்து விழிப்புணர்வு - Daily Dhuniya

Breaking

Saturday, July 23, 2022

திருப்பூரில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மாணவ, மாணவிகள் பிரம்மாண்ட செஸ் மேடை அமைத்து விழிப்புணர்வு

திருப்பூரில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் பிரம்மாண்ட செஸ் மேடை அமைத்து செஸ் உருவங்களாக தங்களை மாற்றி செஸ் விளையாடி பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தனர். சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையும் படிக்க | தனியார் பள்ளி வன்முறையில் ஆசிரியர்களின் பட்டச் சான்றிதழ்களும் எரிப்பு: கேள்விக்குறியான பணியாளர்களின் எதிர்காலம்

அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ மாணவிகள் மூலம் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டம் பழங்கரையில் உள்ள தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் பிரம்மாண்ட செஸ் மேடை அமைத்து செஸ் உருவங்களாக தங்களை மாற்றிக் கொண்டு செஸ் விளையாட்டின் விதிமுறைகள் படி கருப்பு வெள்ளை கட்டங்களில் நகர்ந்து நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

No comments:

Post a Comment