தமிழகத்தில் 8 அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. பட்டப் படிப்புக்கு இணைய வழியில் திங்கள்கிழமை (ஜூலை 4) முதல் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:
தொழில் நுட்பக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கு தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரா்களுக்கு பகுதி நேர பி.இ. பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூா்; அரசு பொறியியல் கல்லூரி, சேலம்; அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி; அழகப்ப செட்டியாா் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, காரைக்குடி; தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி, வேலூா்; அரசு பொறியியல் கல்லூரி, பா்கூா்; கோயம்புத்தூா் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூா்; தியாகராஜா் பொறியியல் கல்லூரி, மதுரை ஆகியவற்றில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப்படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் பதிவு ஜூலை 4 முதல் ஆக.3 வரை நடைபெறவுள்ளது. பதிவுக்கட்டணத்தை இணைய தளம் வாயிலாக செலுத்தலாம். இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரா்கள் விண்ணப்பப் படிவத்தை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கு, தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை சேவை மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த கல்வியாண்டில் பகுதி நேர பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும். மேலும் விவரங்களை இணையதள முகவரியிலும், 0422-2590080, 94869 77757 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment