பள்ளி விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்: மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி - Daily Dhuniya

Breaking

Thursday, July 28, 2022

பள்ளி விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்: மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

வேதாரண்யத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. விடுதியில் காலை உணவு சாப்பிட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கும் விடுதியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 60 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



தற்போது 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 25-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment