அரசு பள்ளி வகுப்பறையின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம் - Daily Dhuniya

Breaking

Wednesday, July 6, 2022

அரசு பள்ளி வகுப்பறையின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அரசு பள்ளியில், வகுப்பறையின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் படுகாயமடைந்தனர்.

தரடாப்பட்டு கிராமத்தில் இயங்கு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில், 6 ஆம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறையில் விரிசல் ஏற்பட்ட நிலையில் திடீரென மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தன.



இதில், மாணவர்கள் ஜனார்தனன், தருண்குமார், முகேஷ் ஆகியோரும், வகுப்பில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் தினகரனும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

No comments:

Post a Comment