பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் எதிரொலி - தற்காலிகமாக 3 ஆசிரியர்கள் நியமனம் - Daily Dhuniya

Breaking

Friday, July 22, 2022

பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் எதிரொலி - தற்காலிகமாக 3 ஆசிரியர்கள் நியமனம்

மாமல்லபுரம் அடுத்த மணமை ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 280 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு, பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை. இரவு காவலர், அலுவலக பணியாளர்கள், எழுத்தர், துப்புரவு பணியாளர் என ஒரு பணியிடம் கூட கடந்த 8 ஆண்டுகளாக, இப்பள்ளியில் நியமிக்கப்படவில்லை. இப்பள்ளியில், கணினி இயக்குபவர் இல்லாததால் ஏற்கனவே உள்ள 2 ஆசிரியர்கள் கூடுதல் பணிச் சுமையுடன் அலுவலக பணிகளையும், மாணவர்கள் பற்றி தகவல்களை கணினியில் பதிவேற்றவும், பள்ளிக்கு இ - மெயில் மூலம் வரும் தகவல்களை கவனித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு - கலெக்டர் அறிக்கை

இந்நிலையில், ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென மாணவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மணமையில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்த, செய்தி தினகரன் நாளிதழில் பலமுறை ஆசிரியர் இல்லாதது குறித்து படத்துடன் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தரம் ஆகியோர் மணமை ஆதிதிராவிடர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், அருகிலிருந்த பள்ளிகளில் இருந்து, 3 ஆசிரியர்களை தற்காலிகமாக நியமித்து, நடவடிக்கை எடுத்தனர். இன்னும், ஓரிரு தினங்களில் அந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவார்கள் என தெரிவித்தனர்.

இதையும் படிக்க | நாட்டுப்புற கலைஞர்களைக் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ்

தினகரன் செய்தி மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் எதிரொலியால் 3 ஆசிரியர்கள் பணிக்கு வர உள்ளனர். செய்தி வெளியிட்ட, தினகரன் நாளிதழுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். ஆய்வின்போது, மணமை ஊராட்சி தலைவர் செங்கேணி, துணை தலைவர் பூர்ணிமா சண்முகம், திருக்கழுக்குன்றம் விசிக ஒன்றிய செயலாளர் இசிஆர் அன்பு, திமுக நிர்வாகி செல்வகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment