பள்ளி ஆசிரியையின் தாலி செயினை பறித்துச் சென்ற 2 இளைஞர்கள் கைது..! - Daily Dhuniya

Breaking

Wednesday, July 27, 2022

பள்ளி ஆசிரியையின் தாலி செயினை பறித்துச் சென்ற 2 இளைஞர்கள் கைது..!

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே, பள்ளி ஆசிரியையின் தாலி செயினை பறித்துச் சென்ற 2 இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்கள் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த 4 சவரன் தாலி செயினை மீட்டனர்.



காளவாய்பட்டி நடுநிலை பள்ளி ஆசிரியை ராதா, கடந்த 20ம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, பைக்கில் பின் தொடர்ந்த மர்ம நபர்கள், அவரது தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.



ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில், சிசிடிவி பதிவுகளை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட சுணைப்புகநல்லூர் திலகன், அறந்தாங்கி முருகானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment